செய்திகள்நுவரெலியாமலையகம்

மஸ்கெலியா பிரவுன்ஸ்விக் தோட்ட மக்கள், நேற்று ஆர்ப்பாட்டம்.

பல்வேறு விடயங்களுக்கு தீர்வைக் கோரி, நுவரெலியா மஸ்கெலியா பிரவுன்ஸ்விக் தோட்ட மக்கள், நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர்.

நியாயமான ஆயிரம் ரூபா சம்பள உயர்வு வேண்டும், வேலை நாட்களை குறைக்க கூடாது, கூட்டு ஒப்பந்தத்தை மீண்டும் நடைமுறைப்படுத்து போன்றை விடயங்களை வலியுறுத்தியுள்ளனர்.

பிரவுன்ஸ்விக் தோட்ட ஆலய முன்றலில், நேற்று காலை 8.30 அளவில், இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பை தருவதாக கூறிய கம்பனிகள், தற்போது தம்மை ஏமாற்றியுள்ளதாக, தொழிலாளர்கள் கவலை வெளியிட்டனர்.

முன்னர், நாளொன்றுக்கு 16 கிலோ பச்சை தேயிலையை பறித்து வந்த நிலையல், இன்று, அது 20 கிலோ கிராம் வரை அதிகரிக்கப்பட்டுள்ளதாக, தொழிலாளர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

எனவே, அரசாங்கம் தலையிட்டு, தமது பிரச்சினைகளுக்கு நியாயமான தீர்வை பெற்றுத்தர வேண்டும் என, ஆர்ப்பாட்டகாரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில், தொழிற்சங்க பேதமின்றி 150 க்கும் அதிகமான தொழிலாளர்கள் பங்கேற்றனர்.

Related Articles

Back to top button