மஸ்கெலியா மின்னா பெயாலோன் நீர் தேக்கத்தில் பெண் ஒருவரின் சடலம் மீட்பு

மஸ்கெலியா – மின்னா பெயாலோன் நீர் தேக்கத்தில் பெண் ஒருவரின் சடலம் மீட்கபட்டுள்ளது.
குறித்த சடலம் இன்று 12மணியளவில் மீட்கபட்டுள்ளதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சடலமாக மீட்கப்பட்டவர் மஸ்கெலியா மின்னா பெயாலோன் தோட்ட பகுதியை சேர்ந்த கறுப்பையா லெச்சுமி ஒரு பிள்ளையின் தாய் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
இந்த வயோதிப பெண் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு காணாமல் போனார் என அவரின் உறவினர்கள் மஸ்கெலியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றினை பதிவு செய்து இருந்ததாக மஸ்கெலியா பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த நிலையில் இன்றைய தினம் பெயோலோன் பகுதியில் உள்ள நீர் தேக்கத்தில் பெண்ணின் சடலம் மிதந்து கொண்டிருந்ததை கண்ட பொது மக்களால் மஸ்கெலியா பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
இதனை தொடர்ந்து ஹட்டன் நீதவான் சம்பவ இடத்திற்கு சென்று மரண விசாரணைகளை மேற்கொண்டுள்ளதுடன், சட்டவைத்திய அதிகாரியின் பிரேத பரிசோதனைக்காக சடலம் நாவலபிட்டி பொது வைத்தியசதலைக்கு அனுப்பிவைக்கபட்டுள்ளதாக மஸ்கெலியா பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மஸ்கெலியா பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.