...
செய்திகள்

மஸ்கெலியா வையத்தியசாலை அபிவிருத்தி செய்யப்பட்டு திறந்துவைக்கப்பட்டது.

தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர்
ஜீவன் தொண்டமான் அவர்களின் அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் ஊடாக மஸ்கெலியா
வையத்தியசாலை அபிவிருத்தி செய்யப்பட்டு திறந்துவைக்கப்பட்டது.

மேலும் இவ் வைத்தியசாலை
மூன்று அடுக்குகளை கொண்டது அதன் இரண்டு தளங்களில் covid-19 தொற்றாளர்கள் தங்கி
சிகிச்சை பெறவும் மற்றைய ஒரு மாடியில் வைத்தியசாலைக்கு வரும் வெளி நோயாளர்கள்
தங்கி சிகிச்சை பெறுவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.

அத்துடன் வைத்தியசாலைக்கு செல்லும் பிரதான பாதையையும், வைத்தியசாலையை
சுற்றியும் முழுமையாக்கப்பட்ட கார்ப்பட் பாதையும் செப்பனிடப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் மஸ்கெலியா பிரதேச சபையின் தவிசாளர் செம்பகவள்ளி, இலங்கை
தொழிலாளர் காங்கிரஸின் இளைஞர் அணி பொதுச்செயலாளர் அர்ஜுன் ஜெயராஜ், கிளங்கன்
வைத்தியசாலை வைத்திய அதிகாரி அருள்குமரன் மஸ்கெலியா வைத்திய அதிகாரி எச்.
இர்ஷாட், வைத்தியசாலையில் உள்ள வைத்தியர்கள் மற்றும் நகர வர்த்தகர்கள் உட்பட
பலர் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர்.

Related Articles

Back to top button


Thubinail image
Screen