மஸ்கெலிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மொக்கா தோட்ட கீழ் பிரிவில் இன்று மதியம் (23)தொழிலாளர்கள் மீது குளவி கொட்டியதில் அறுவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஆண்தொழிலாளர்கள் கொழுந்து பறித்து கொண்டிருந்த வேலையில் தேயிலை செடியில் கட்டப்பட்டிருந்த குளவி கூடே இவ்வாறு களைந்து கொட்டியதில் ஆறு ஆண்கள் மஸ்கெலிய மாவட்ட வைத்திய சாலையில் அனுமதிக்க பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இவ்வாறு குளவி கொட்டுக்கு இலக்கானவர்கள் 70வயது,62வயது,64 வயது 70 வயது ,64 வயது, 30 ,வயது உடையவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
கௌசல்யா.