...
செய்திகள்

மஹரகமயில் காணாமல் போன சிறுமி வீடு திரும்பியுள்ளார்..

மஹரகம பிரதேசத்தில் இருந்து கடந்த ஜனவரி 7 ஆம் திகதியிலிருந்து காணாமல்போன 15 வயது சிறுமி மீண்டும் வீடு திரும்பியுள்ளதாக மஹரகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த செவ்வாய்க்கிழமை 7 ஆம் திகதி  காணாமல் போன குறித்த சிறுமியைக் கண்டுபிடிக்க பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியிருந்தனர்.

இந்நிலையில் ஊடகங்களில் வெளியான செய்திகளைப் பார்த்துவிட்டு தனது மகள் மீண்டும்  வீட்டுக்குத் திரும்பியதாக சிறுமியின் தாய் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

Related Articles

Back to top button


Thubinail image
Screen