செய்திகள்

மஹரகம, தம்பஹேன வீதியில் விபத்து – பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் உயிரிழப்பு!

மஹரகம, தம்பஹேன வீதியில் இன்று(21) காலை இடம்பெற்ற மோட்டார்சைக்கிள் விபத்தில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கடமை முடிந்து வீடு திரும்பிய மஹரகம போக்குவரத்து பிரிவின் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

பன்னிபிட்டியவில் உள்ள சர்வதேச பாடசாலை ஒன்றுக்கு அருகில் போக்குவரத்து ஒழுங்குபடுத்தல் பணிகளை முடித்துவிட்டு திரும்பியவேளை இந்த விபத்து இடம்பெற்றுள்ளமை ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

பொலிஸ் உத்தியோகத்தர் பயணித்த மோட்டார்சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த மின்கம்பத்துடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

பொலன்னறுவையைச் சேர்ந்த 24 வயதான எஸ்.எம்.சஞ்சீவ என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளாரென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related Articles

Back to top button