சிறப்பு

மஹரகம புற்றுநோய் வைத்தியசாலைக்கு வருபவர்களுக்கு இலவச தங்குமிடம் மற்றும் உணவு..?

மஹரகம புற்றுநோய் வைத்தியசாலைக்கு வருபவர்களுக்கு”இலவச தங்குமிடம் மற்றும் உணவு வழங்கும் திட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்த மாபெரும் சேவையை மஹரகம இளம் பௌத்த சங்கம் கடந்த 10 வருடங்களுக்கு மேலாக முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை மஹரகம புற்றுநோய் வைத்திய சாலைக்கும், புற்றுநோய் நிலையத்துக்கும் தூர இடங்களிலிருந்து சிகிச்சைக்காக வருகை தரும் நோயாளிக்கும் அவருடன் தங்குபவருக்கும்” இலவச தங்குமிட வசதிகளும், தினமும் இலவசமாக காலை,மதிய.இரவு வேளை உணவுகளும்” இங்கு வழங்கபடுவதும் சிறப்பம்சமாகும்.

மேலும் 50 கிலோமீட்டருக்கு மேல் தூர பிரயாணம் செய்யும் நோயாளிகளுக்கு வைத்திய சாலைக்குச் செல்ல”இலவச பிரயாண வசதியும்”இங்கு வழங்கப்படுவதும் முக்கியவிடயமாகும்.

இச் சேவைகளைப் பெற்றுக் கொள்ள அவசியமானவர்களும் ,இந்த சேவைக்கு உதவிகளைச் செய்ய விரும்புபவர்களும் கீழுள்ள எண்களைத் தொடர்பு கொள்ளலாம்.

0112839956
0112746279

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com