மஹர சிறைச்சாலை சம்பவத்தில் உயிரிழப்பு மேலும் அதிகரிப்பு

uthavum karangal

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்ற நிலைமையில் காயமடைந்த மேலும் இருவர்
உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

மஹர சிறைச்சாலை மோதலில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளது.

ராகமை வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த இருவரே இவ்வாறு
உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் சம்பவத்தில் காயமடைந்த 104 பேர் தொடர்ந்தும் சிகிச்சை
பெற்றுவருகின்றனர்.

காயமடைந்தவர்களில் சிறைச்சாலையின் தாதி ஒருவரும் மருத்துவ ஆலோசகர் ஒருவரும்
அடங்குவதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்தார்.

ராகம வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்றுவரும் மஹர சிறைச்சாலையின் கைதிகளில் 38
பேருக்கு இதுவரையில் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

மஹர சிறைக்கைதிகள் சிறைச்சாலையின் மருந்தகத்தை உடைத்து, உள ரீதியாக
குழப்பநிலையை தோற்றுவிக்கக்கூடிய மருந்தினை உட்கொண்டமையே வன்முறைக்குக்
காரணமென பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்