அரசியல்செய்திகள்

மஹிந்தானந்தவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு.

முன்னாள் அமைச்சரும் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்தானந்த அளுத்கமகேவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கின், மேலதிக சாட்சி விசாரணைகள் அடுத்த வருடம் பெப்ரவரி மாதம் 17 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி பிரதீப் ஹெட்டியாராச்சி வழக்கு விசாரணையை ஒத்திவைத்து இன்று உத்தரவிட்டுள்ளார்.

அமைச்சராக செயற்பட்ட காலப்பகுதியில், முறையற்ற வகையில் சேகரித்த 27 மில்லியன் ரூபா நிதியை பயன்படுத்தி, பொரளை கிங்சி வீதியில் சொகுசு வீடொன்றை கொள்வனவு செய்தமையூடாக , நிதித்தூய்தாக்கல் சட்டத்தின் கீழ் குற்றமிளைக்கப்பட்டுள்ளதாக மஹிந்தானந்த அளுத்கமகேவிற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்து.

இன்றைய வழக்கு விசாரணையின் போது, மஹிந்தானந்த அளுத்கமகே மன்றில் ஆஜராகியிருந்தார்.

இந்த வழக்கின் ஆறு சாட்சியாளர்களையும் அடுத்த வழக்கு விசாரணையின் போது மன்றில் ஆஜராகுமாறு இதன்போது, கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி பிரதீப் ஹெட்டியாராச்சி உத்தரவிட்டுள்ளார்.

Related Articles

Back to top button
image download