அரசியல்

மஹிந்த குடும்பம் மீண்டும் மந்திர கதிரைக்கு ஆசைப்படுகிறது – சாடுகிறார் சஜித்.

இலங்கையில் மீண்டும் அரச வாழ்க்கையை வாழ வேண்டும் என்ற நோக்கில் ஒரு கூட்டம் அதிகாரத்திற்காக ஆசைப்பட்டுக் கொண்டிருப்பதாக ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

பொலன்னறுவையில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இன்று ஒரு கூட்டத்துக்கு அதிகார ஆசை வந்துள்ளதாகவும் அலரி மாளிகைக்குள் எவ்வாறு நுழைவது, ஜனாதிபதி மாளிகைக்குள் எவ்வாறு நுழைவது என்றே இவர்கள் கனவு காண்பதாகவும் சஜித் இதன்போது தெரிவித்தார்.

விவசாயிகளுக்கும், மீனவர்களுக்கும் சலுகைகளை வழங்கவா இவ்வாறு ஆசைப்படுகிறார்கள் எனவும் சஜித் பிரேமதாச கேள்வியெழுப்பினார்.

இவர்களின் ஒரே குறிக்கோள், தங்களையும் தங்கள் சார்ந்தவர்களையும் பலப்படுத்த வேண்டும் என்பதேயாகும் எனவும் சஜித் இதன்போது தெரிவித்தார்.

ஒரு நாட்டின் தலைவன் என்றால், தனது குடும்பத்தைவிட இந்த நாட்டை தான் நேசிக்க வேண்டும். 60 இலட்சத்துக்கும் அதிகமான குடும்பங்களைத் தான் தனது குடும்பமாக கருதவேண்டும் எனவும் சஜித் பிரேமதாச இதன்போது சுட்டிக்காட்டினார்.

எந்தவொரு பிரிவினையும் இன்றி இந்த நாட்டை முன்னேற்றப்பாதைக்கு கொண்டு செல்வதே எனது இலக்கு எனவும் சஜித் பிரேமதாச இதன்போது தெரிவித்தார்.

Related Articles

Back to top button
image download