மஹிந்த ராஜபக்ச 10வருடங்கள் ஆட்சி புரிந்தும் மலையக மக்களுக்கு காணி உரித்துரிமையை கூட வழங்கவில்லை

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச பத்து வருடங்கள் ஆட்சி புரிந்தார். எனினும் மலையக மக்களுக்கு காணி உரித்துரிமையை கூட வழங்கவில்லை என அமைச்சர் லக்சமன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற விவாதத்தில் இன்று கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு கூறியுள்ளார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
நல்லாட்சியில் 7 பேர்ச்சஸ் காணித் துண்டை மலைய மக்களுக்கு வழங்க வேண்டும் என்ற யோசனையை அமைச்சரவையில் நானே முன்வைத்தேன். தற்போது காணி பத்திரத்தை உரித்துரிமையுடனே வழங்கி வருகின்றோம்.
தோட்ட மக்களுக்கு 7 பேர்ச்சஸ் காணி வழங்க யோசனை முன்வைத்தது நானேயாகும்.
தற்போது நாம் அனைத்து தோட்ட மக்களுக்கு காணி பத்திரத்துடன் உரித்துரிமையையும் வழங்கி வருகின்றோம்.
இதற்கும் முன்னர் எந்த தோட்ட மக்களுக்கும் காணி பத்திரத்திற்கு உரித்துரிமை கிடைக்கவில்லை.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பத்து வருடங்கள் ஆட்சி புரிந்தார்.எனினும் காணி உரித்துரிமையை கூட வழங்கவில்லை.
10 வருடங்கள் ஆட்சி செய்தும் மலையக மக்களுக்கு ஒன்றும் செய்யவில்லை.
சந்திரிக்கா அம்மையாரின் ஆட்சியை இணைத்தால் 20 வருடங்கள் சுதந்திரக் கட்சி ஆட்சி செய்துள்ளது. எனினும் ஒன்றும் நடக்கவில்லை. நாம் செய்து வருகின்றோம்.
ஆகவே மலையக மக்களுக்காக அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி பணிகளுக்கு எதிர்ககட்சிகள் பூரண ஒத்துழைப்புகளை வழங்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.