செய்திகள்

மாகாணங்களுக்கிடையில் நாளை முதல் பஸ், ரயில் சேவைகள் ஆரம்பம்.!

அத்தியாவசிய சேவையில் ஈடுபடும் சேவையாளர்களுக்காக நாளை முதல் மாகாணங்களுக்கிடையிலான பஸ் மற்றும் ரயில்களை சேவையில் ஈடுபடுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து மற்றும் சமூக பொலிஸ் சேவைகள் இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

தேசிய கொரோனா கட்டுப்பாட்டு மத்திய நிலையத்தின் ஆலோசனைக்கமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார். அதன்பிரகாரம், மாகாணங்களுக்கிடையில் போக்குவரத்து மேற்கொள்ளும் பயணிகளிடம் சேவை அட்டை, நிறுவன பிரதானியின் கடிதம் என்பன கட்டாயம் இருக்க வேண்டும் என்றும், இந்த நிபந்தனையை பின்பற்றுவதற்கு தேவையான சகல ஆலோசனைகளையும் பஸ் நடத்துநர்கள் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன், அத்தியாவசிய தனிப்பட்ட விடயங்களுக்காக பல்வேறு நிறுவனங்களுக்குச் செல்ல விரும்புவோர் இந்த மாகாணங்களுக்கிடையிலான பஸ் மற்றும் ரயில்களைப் பயன்படுத்துவதன் மூலமும் தங்கள் தேவைகளை நிறைவு செய்ய முடியும். அவர்களும் தங்கள் தேவையை உறுதிப்படுத்தும் ஆவணத்தை தங்கள் வசம் வைத்திருக்க வேண்டும்.

Related Articles

Back to top button