செய்திகள்

மாகாணங்களுக்கிடையில் மட்டுப்படுத்தப்பட்ட பஸ், ரயில் சேவை இன்று ஆரம்பம் ; சுகாதார நடைமுறைகள் பின்பற்றப்படும்

மாகாணங்களுக்கிடையில் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் இன்று காலை (14) முதல் பஸ் மற்றும் ரயில் சேவை முன்னெடுக்கப்படவுள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

தேசிய கொரோனா கட்டுப்பாட்டு மத்திய நிலையத்தின் ஆலோசனைக்கமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் மேலும் கூறியுள்ளார். அதன்பிரகாரம், அரச மற்றும் தனியார் பிரிவுகளில் அத்தியாவசிய சேவை நிமித்தம் செல்பவர்கள் மாத்திரமே இவற்றில் பயணிக்க முடியும் என கூறினார்.

அதேநேரம் பயணிகள், அரச அல்லது தனியார் நிறுவனங்களின் அடையாள அட்டை அல்லது தாம் செல்லும் பணி தொடர்பிலான ஆவணத்தை வைத்திருக்க வேண்டும் என இராஜாங்க அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

இந்த நிபந்தனையை பின்பற்றுவதற்கு தேவையான சகல ஆலோசனைகளையும் பஸ் நடத்துநர்கள் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன், அத்தியாவசிய தனிப்பட்ட விடயங்களுக்காக பல்வேறு நிறுவனங்களுக்குச் செல்ல விரும்புவோர் இந்த மாகாணங்களுக்கிடையிலான பஸ் மற்றும் ரயில்களைப் பயன்படுத்துவதன் மூலமும் தங்கள் தேவைகளை நிறைவு செய்ய முடியும். அவர்களும் தங்கள் தேவையை உறுதிப்படுத்தும் ஆவணத்தை தங்கள் வசம் வைத்திருக்க வேண்டும்.

Related Articles

Back to top button