செய்திகள்

மாகாணங்களுக்கு இடையிலான பயணக்கட்டுப்பாடுகள் இன்று முதல் நீடிக்கப்பட்டுள்ளன.

தற்போது அமுலிலுள்ள மாகாணங்களுக்கு இடையிலான பயணக்கட்டுப்பாடு இன்று முதல்
எதிர்வரும் 19 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அசேல குணவர்தனவின் கையொப்பத்துடன்
நேற்று புதிய சுகாதார வழிகாட்டல் கோவை வௌியிடப்பட்டுள்ளது.

இதற்கமைய பொதுப்போக்குவரத்து சேவைகளில் ஆசன எண்ணிக்கையில் 50 வீதமானோர்
மாத்திரமே பயணிக்க முடியும்.

மேல் மாகாணத்தில் மாத்திரம் ஆசன எண்ணிக்கையில் 30 வீதமானோர் மாத்திரம் பயணிக்க
முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

தனியார் , வாடகை வாகனங்கள் மற்றும் முச்சக்கரவண்டிகளில் பயணிக்கக்
கூடியவர்களின் எண்ணிக்கையும் ஆசன எண்ணிக்கைக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

திருமண வைபவங்களை நடத்த அனுமதி வழங்கப்பட மாட்டாது.

எனினும், மணமகன் மற்றும் மணமகள் உள்ளிட்ட 10 பேரின் பங்குபற்றுதலுடன்
பதிவுத்திருமணத்தை நடத்த அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

மரணம் நிகழ்ந்தால், பூதவுடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு 24
மணித்தியாலங்களுக்குள் இறுதி சடங்குகள் நடத்தப்பட வேண்டும் என்பதுடன் அதில்
15 பேர் மாத்திரமே கலந்துகொள்ள முடியும்

திரையரங்குகள், பூங்காக்கள், கடற்கரைகள், நீச்சல் தடாகங்கள், பப்கள்,
தவரணைகள், கெசினோ மற்றும் இரவு நேர களியாட்ட விடுதிகள், சூதாட்ட நிலையங்கள்
என்பன தொடர்ந்தும் மூடப்பட்டிருக்கும்.

புதிய சுகாதார வழிகாட்டல் கோவையில் மசாஜ் நிலையங்களை திறக்க
அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button