செய்திகள்

மாகாண எல்லைகளை கடப்பவர்களை கைதுசெய்ய இன்று முதல் சிறப்பு நடவடிக்கை

இன்று முதல் மாகாணங்களுக்கு இடையேயான பயணக் கட்டுப்பாடுகளை மீறும் நபர்கள் மீது சிறப்பு கவனம் செலுத்தப்படும் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தனிநபர்கள் பேருந்து வழியாக மாகாண எல்லைகளுக்குச் சென்று எல்லை தாண்டி நடந்து சென்று மற்றொரு மாகாணத்தில் நுழைந்து மற்றொரு பேருந்தில் பயணம் மேற்கொள்வது குறித்து முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது.

இதுபோன்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டால் சம்பந்தப்பட்ட பேருந்தின் உரிமையாளர், ஓட்டுநர் மற்றும் நடத்துனர் கைது செய்யப்பட்டு பேருந்து பறிமுதல் செய்யப்படும் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹன குறிப்பிட்டார்.

எனவே மாகாணங்களுக்கு இடையேயான பயணக் கட்டுப்பாடுகளை கண்டிப்பாக அமல்படுத்த, அனைத்து மாகாணங்களின் எல்லைகளிலும் மற்றும் சோதனைச் சாவடிகள் சிறப்பு பொலிஸ் குழுக்கள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

மாகாணங்களுக்கு இடையில் முழு பொது போக்குவரத்து சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளன, அதனால் மாகாணங்களுக்கு இடையில் பயணம் செய்வதை தவிர்க்குமாறும் அவர் கேட்டுக் கொண்டார்.

குறிப்பாக மேல் மாகாணத்தைச் சுற்றியுள்ள அனைத்து முக்கிய வீதிகளும், துணை வீதிகளும் மற்றும் பாலங்கள் ஆகியவற்றை உள்ளடக்கும் வகையில் சிறப்பு வீதி தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ள.

இதனிடையே வேறு வழிகளில் மாகாண எல்லைகளைக் கடந்து செல்ல முயற்சிக்கும் நபர்கள் கைது செய்யப்படுவார்கள் மற்றும் அவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.

Related Articles

Back to top button