செய்திகள்

மாகாண சபை தேர்தல் தொடர்பான வழக்கு தொடர்பான விசாரணையின் முடிவு விரைவில்….

எல்லை நிர்ணய அறிக்கை சமர்ப்பி்க்கப்படாத சந்தர்ப்பத்தில் பழைய முறையில் மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கு வாய்ப்புகள் உள்ளதா என முடிவு செய்யுமாறு ஜனாதிபதினால் முன்வைக்கப்பட்ட வேண்டுகோள் தொடர்பான வழக்கு விசாரணை உயர்நீதிமன்றத்தில் இன்று எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்படி இந்த வழக்கு விசாரணையின் முடிவுகள் விரைவில் ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கை விசாரணை செய்வதற்காக நீதிபதி ஜயந்த ஜயசூரிய தலைமையில் ஐவரடங்கிய நீதிபதிகள் குழாம் நியமிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
image download