செய்திகள்

மாகொலையில் -இளம் கணவனை கருங்கல் கொண்டு கொலை செய்தமனைவி ..?

மாகொல, சிறிமங்கல வீதியின் வீடொன்றில் உறங்கிக் கொண்டிருந்த இளம் குடும்பஸ்த்தர் கருங்கலால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் உயிரிழந்த நபரின் மனைவியால் இந்த கொலை சம்பவம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ள நிலையில், பின்னர் வீட்டை விட்டு வௌியேறிய குறித்த பெண் பிற்பகல் 2.00 மணி அளவில் பொலிஸில் சரணடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

23 வயதுடைய மாகொல, சிறிமங்கல பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இவர் ஹெரோயின் போதைப்பொருளுக்கு அடிமையானவர் எனவும், மேலும் பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்பு பட்டுள்ளதாகவும் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட சபுகஸ்கந்த பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபரான குறித்த பெண் இன்று (02) மஹர நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ள நிலையில், சபுகஸ்கந்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

Back to top button