சமூகம்
மாணவியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சம்பவம் குறித்து அதிபர் கைது

குளியாப்பிட்டி பகுதியிலுள்ள பிரபல பாடசாலையின் 17 வயதுடைய மாணவி ஒருவரைத் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சம்பவம் தொடர்பில் பாடசாலையின் அதிபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த மாணவி, பல்வேறு சந்தர்ப்பங்களில் துஷ்பிரயோகங்களுக்கு உட்படுத்தப்பட்டுள்ளாதாக தெரியவந்துள்ளது.
இது குறித்து, பாடசாலை மாணவி, பொலிஸாரிடம் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
இதனையடுத்து, சந்தேகநபரான அதிபர் இன்று (26) குளியாப்பிட்டி நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலையாகியுள்ளார்.