நுவரெலியாமலையகம்

மாணிக்கக்கல் அகழ்வு: ஐவர் தப்பியோட்டம்

பொகவந்தலாவை கெசல்கமுவ ஆற்றிற்கு அருகாமையில் சட்டவிரோதமான முறையில் மாணிக்ககல் அகழ்ந்து கொண்டிருந்த 6 பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின்படி நேற்று மதியம் 2 மணியளவில் பொகவந்தலாவை பொலிஸாரினால் இந்த சுற்றி வளைப்பு மேற்கொள்ளப்பட்டது.

கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து மாணிக்ககல் அகழ்விற்கு பயன்படுத்திய உபகரணங்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரை ஹட்டன் நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதுடன், தப்பி சென்ற ஏனைய சந்தேக நபர்களை கைது செய் நடவடிக்கை முன்னெடுத்துள்ளதாக பொகவந்தலாவை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button