
பசறை கோனக்களை தோட்ட காவத்தை பிரிவில் வசிக்கும் திருமதி பாப்பாத்தி அம்மா சுமார் 18 வருடத்திற்கு மேல் இ.தொ.கா.வின் மாதர் சங்க தலைவியாக சேவையாற்றியவர்.
அவரது சேவையினை அறிந்த இ.தொ.கா.வின் உப தலைவரும் பெருந்தோட்ட பிராந்தியங்கள் அபிவிருத்தி தொடர்பான, பிரதமரது இணைப்பு செயலாளர் செந்தில் தொண்டமான் தொடர்ச்சியாக தனது அலுவலகத்தில் பாப்பாத்தியின் பிறந்த தினத்தை கொண்டாடினார்.

இவ்வருடம் அவரது பரிந்துரைக்கு அமைய இன்று பசறை இ.தொ.கா சமூக மேம்பாட்டு மையத்தில் அவரது 75 வது பிறந்த தினம் விமர்சியாக கொண்டாடப்பட்டது.
செய்தி ராமு தனராஜா