செய்திகள்

மாதாந்தம் இரண்டு இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபாவுக்கும் அதிக வருமானம் பெறுவோர் வரி செலுத்த வேண்டும் ..?

வருமானம் பெறும் போது செலுத்தப்பட்ட வரி மற்றும் வட்டி வருமானத்திற்கான வரி ஆகியன இன்று முதல் இரத்து செய்யப்படவுள்ளன.

இதன்பிரகாரம் இதுவரை மாதாந்தம், ஒரு இலட்சம் ரூபாவுக்கும் அதிக வருமானம் பெறும் நபர்கள் செலுத்திய வரியை எதிர்வரும் காலத்தில் அறவிடாதிருக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

எனினும் மாதாந்தம் இரண்டு இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபாவுக்கும் அதிக வருமானம் பெறுவோர் வரி செலுத்த வேண்டும் என அரசு தெரிவித்துள்ளது.

இதேவேளை சேமிப்பு கணக்குகளுக்காக இதுவரை அறவிடப்பட்ட 5 வீத வரியும் இன்று முதல் இரத்துச் செய்யப்படவுள்ளது.

இதனை தவிர, வியாபார நடவடிக்கையின் போது அறவிப்படும் வட் வரி வரையறை இன்று முதல் காலாண்டுக்கு 75 மில்லியன் ரூபா வரை அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு அறிவித்துள்ளது.

இதனடிப்படையில், காலாண்டுக்கு 75 மில்லியனுக்கும் குறைவாக வருமானம் ஈட்டும் வியாபாரிகளுக்கான வட் வரி இரத்துச் செய்யப்படுவதாக நிதி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

Related Articles

Back to top button