...
செய்திகள்பதுளைமலையகம்

மாதாந்த ஊதியத்தை வழங்குமாறு கோரி மொனறாகல குமாரவத்த தோட்ட இறப்பர் வெட்டும் தொழிலாளர்கள் இன்று (15) கவனயீர்ப்பு போராட்டம்.

மொனறாகல குமாரவத்த தோட்டத்தின் எட்டு
பிரிவுகளைச் சேர்ந்த தொழிலாளர்களுக்கு
மாதந்த முழுசம்பளம் தோட்ட முகாமைத்துவத்தால் வழங்கப்பபடாததை கண்டித்து இன்று தொழிலாளர்கள் அடையாள வேலைநிறுத்ததில் ஈடுபட்டதோடு பெருமளவிலான தொழிலாளர்கள்
மொனறாகல – வெள்ளச்சிகட சநிதி பிரதான வீதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

குறித்த வீதியில் பயணித்த தோட்ட அதிகாரியின் வாகனத்தை ஆர்ப்பாட்டக்காரர்கள் இடைமறித்து தாம் எதிர்நோக்கும் பிரச்னைக்கான நியாயமான
தீர்வினை கோரியிருந்தனர்.

இதன்போது உரிய தீர்வினை தோட்ட முகாமையாளரோடு கலந்துரையாடிப் பெற்றுத் தருவதாக உறுதியளித்ததையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் போராட்டத்தை தற்காலிகமாக போராட்டத்தைக் கைவிட்டுச் சென்றனர்.

நடராஜா மலர்வேந்தன்

Related Articles

Back to top button


Thubinail image
Screen