செய்திகள்

மாதாந்த சிகிச்சை பெற்று வரும் நோயாளர்களுக்கான மருந்து விநியோகம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும்..

அரச வைத்தியசாலைகளில் மாதாந்த சிகிச்சை சிகிச்சை பெற்று வரும் நோயாளர்களுக்கான மருந்து விநியோகம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதாக பிரதி தபால் மாஅதிபர் ராஜித்த ரணசிங்க குறிப்பிடுகின்றார்.

கொவிட் 19 இரண்டாம் அலை தொடர்ந்தும் நீடிப்பதால், சுகாதார பிரிவுடன் முன்னெடுக்கப்பட்டு வரும் மருந்து விநியோக நடவடிக்கைகள் தொடர்வதாகவும் அவர் கூறினார்.

தொற்றா நோயாளர்களுக்கு 5 இலட்சத்து 75 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருந்து பொதிகள் தபால் திணைக்களத்தினூடாக, விநியோகிப்படுவதாகவும் பிரதி தபால் மாஅதிபர் ராஜித்த ரணசிங்க தெரிவித்துள்ளார்.

இதனிடையே, கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தற்போது மீளாய்வு செய்யப்படுகின்றன.

தற்போது முன்னெடுக்கப்படுகின்ற நடவடிக்கைகளில் ஏதேனும் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட வேண்டுமா என்பது குறுத்து ஆராயப்படுவதாக ஆரம்ப சுகாதார சேவையின் தொற்றுநோய் பிரிவு
மற்றும் கொவிட் 19 ஒழிப்பு இராஜாங்க அமைச்சின் செயலாளர் விசேட வைத்திய நிபுணர் அமல் ஹர்ஷ டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.

பி.சி.ஆர். பரிசோதனைகள் , தனிமைப்படுத்தல் செயற்பாடுகள் உள்ளிட்டவற்றிற்கு, அரசினால் 100 பில்லியன் ரூபாவுக்கும் மேற்பட்ட நிதி இதுவரை செலவிடப்பட்டுள்ளதாகவும் விசேட வைத்திய நிபுணர் அமல் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

Related Articles

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com