சமூகம்
மாத்தறையில் தந்தை மகனுக்கு செய்த கொடூரம்

மாத்தறை – வல்கம பகுதியில் தந்தை ஒருவர் மின்சாரத்தைப் பாய்ச்சியதில் மகன் உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளதுடன், இருவருக்குமிடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக தநந்தை மகன் மீது மின்சாரத்தைப் பாய்ச்சியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர் வல்கம பகுதியைச் சேர்ந்த 29 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் உயிரிழந்தவரின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும், சம்பவத்தில் உயிரிழந்தவரின் சடலம் மீதான நீதவான் விசாரணை இன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.