சமூகம்
மாத்தறையில் துப்பாக்கி சூடு: ஒருவர் பலி!
மாத்தறை – ஊறுபொக்க ஹூலங்கந்தை தம்பஹல பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் இன்று முற்பகல் 9.15 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில்,உந்துருளியில் பயணித்து கொண்டிருந்த நபர் ஒருவர் மீதே துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
துப்பாக்கிதாரிகள் தலைமறைவாகியுள்ள நிலையில் அவர்களை கைது செய்ய நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.
உயிரிழந்தவரின் சடலம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.