செய்திகள்

மாத்தறை- தெனியாய அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோயில்..

தென்னிலங்கை கோயில் கொண்ட திருமகளே தாயே
தேன்தமிழால் உன்னை நாம் போற்றி வணங்குகிறோம்
தெளிவான வழிகாட்டி உதவியை செய்திடம்மா
தேடிநிற்கும் நல்வாழ்வைத் தவறாமல் தந்திடம்மா
மாத்தறை மாநிலத்தில் குடிகொண்ட கோமகளே தாயே
மனமுருகியுன்னை நாம் நித்தமும்   துதிக்கின்றோம்
மாற்றமில்லா மனவுறுதி எமக்கு நீ வழங்கிடம்மா
மகிழ்வான பெருவாழ்வை நித்தமும் தந்திடம்மா
தெனியாய மாநகரில் எழுந்திட்ட பேரருளே தாயே
துணை நீயே என்று நாம் என்றுமே நம்புகின்றோம்
தேடிநிற்கும் நிம்மதியை உறுதியுடன் தந்திடம்மா
துணிவுமிகு வளவாழ்வை எமக்கு நீ அருளிடம்மா
தேயிலைப் பெருந்தோட்டம் சூழ அமர்ந்திட்ட அன்புருவே தாயே
தலை தாழா நிலையெமக்கு என்றும் நிலைத்திடவே வேண்டுமம்மா
தப்பாமல் நம்விருப்பை நிறைவு நீ செய்திடம்மா
தாயாக இருந்தெம்மை அணைத்தருள வேண்டுமம்மா
மலைசூழ்ந்த வளநிலத்தில் நிலை பெற்ற நாயகியே தாயே
மானமுடன் நாம் வாழவழியை நீ செய்ய வேண்டும் 
அச்சமில்லா நிம்மதிக்கு நீயே துணையம்மா
வாழ்த்தி வழியமைத்து அருளை நீ தந்திடம்மா
முத்துமாரியம்மன் என்ற நாமம் கொண்டவளே தாயே
முத்தமிழ் போல் இத்தலத்தில் ஒளியேற்றி விட்டிடுவாய்
எத்துன்பம் வந்தாலும் தடுத்து நீ நிறுத்திடம்மா
எதிர் காலம் வளம் பெறவே எமக்கு உரிய வழிகாட்டிடம்மா.
ஆக்கம்- த.மனோகரன். 
துணைத் தலைவர்,
அகில இலங்கை இந்து மாமன்றம்.

Related Articles

Back to top button