செய்திகள்

மாத்தளையில் அதிகளவானோர் கைது.!

நாட்டில் தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறுவோரை கைது செய்யும் நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுகின்றன. தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறிய 563 பேர் கடந்த 24 மணித்தியாலங்களில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன் நேற்று அதிகளவானோர் மாத்தளையில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பதில் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்டத்தில் 49 பேரும், இரத்தினபுரி மாவட்டத்தில் 47 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதற்கமைய, கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் முதல் இதுவரையான காலப்பகுதியில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் 46,823 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பதில் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்தார்.

அதேவேளை, மாகாணங்களுக்கிடையிலான பயணக் கட்டுப்பாட்டை மீறி மேல் மாகாணத்திலிருந்து வெளியேறுவதற்கு முயற்சித்த 564 பேர் மீண்டும் திருப்பி அனுப்பப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

நாட்டில் பயணக் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ள போதிலும், மாகாணங்களுக்கிடையிலான போக்குவரத்து கட்டுப்பாடு தொடர்ந்தும் அமுலிலேயே உள்ளது என்பதுக் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button