
மாத்தளை – அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தானத்தின் பஞ்சரத பவனி வெகு சிறப்பாக நடைபெறுகின்றது.
இன்று காலை ஆலயத்தில் இருந்து தேர் வெளியில் வந்து மாத்தளை நகரை சுற்றி வலம் வந்து நாளை மாலை மீண்டும் ஆலயத்தை சென்றடையவுள்ளது.
குறித்த தேர்திருவிழாவை காண நாடெங்கிலும் இருந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டு வந்துள்ளனர்.
மாத்தளை நகரில் 108 அடி இராஜகோபுரத்தை உடைய இவ்வாலயம் மிகவும் சிறப்பு வாய்ந்த ஆலயமாகும். இதில் வீற்றிருக்கும் முத்துமாரியம்மனுக்கு மாசி மகத்தில் தேர்த்திருவிழா நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.