செய்திகள்

மாத்தளை- எல்கடுவ- உணுகல அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோயில் 

மாத்தளை- எல்கடுவ- உணுகல அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோயில் 
அருள்தந்து, ஆற்றல் தந்து அரவணைக்கும் தாயே
அன்புடனே அரவணைத்து நலந்தருவாய் அம்மா 
ஆசியுடன் உன்னருளால் வளங்கள் பெறவேண்டும் 
தந்திடுவாய் அவ்வாழ்வை தாயே முத்துமாரியம்மா
தப்பான செயற்பாட்டை தடுத்திடுவாய் தாயே
தக்கவழிகாட்டி வழிநடத்திடுவாய் அம்மா 
தோல்விநிலை இல்லாத வாழ்வு பெறவேண்டும் 
தொய்வில்லா வாழ்வை எமக்கருள்வாய் தாயே முத்துமாரியம்மா
மாத்தளை பெருநிலத்தில் அமர்ந்தருளும் தாயே
மானமுடன் நாம்வாழ வழி செய்வாய் அம்மா 
மனந்தளரா உறுதியுடன் நாம்வாழ வேண்டும் 
மகிழ்வான வாழ்வுநிலை தந்திடுவாய் தாயே முத்துமாரியம்மா
ஆலமரம் அருகு கொண்டு வீற்றிருக்கும் தாயே
ஆற்றலுடன் நாம்வாழ வகைசெய்வாய் அம்மா 
நாட்டினிலே நம்முரிமை உறுதிபெற வேண்டும் 
நாடிவந்தெமக்கு வலுவளிப்பாய் தாயே முத்துமாரியம்மா
மலைசூழ்ந்த உணுகலயில் கோயில் கொண்ட தாயே
மாற்றமில்லா நிம்மதியைத் தந்திடுவாய் அம்மா 
மலையகத்தில் நம் தமிழர் வளம்பெறவே வேண்டும் 
மனமுவந்து உறுதிசெய்ய வந்திடுவாய் தாயே முத்துமாரியம்மா
உழைப்பாளர் புடைசூழ எழுந்தருளும் தாயே
அன்னவரின் வாழ்வுக்கு வளம் சேர்ப்பாய் அம்மா 
உழைப்பவரின் ஊதியத்தை உறுதி செய்ய வேண்டும் 
உத்தமியே, உடனிருப்பாய் தாயே முத்துமாரியம்மா.
ஆக்கம்- த.மனோகரன். 
துணைத் தலைவர், 
அகில இலங்கை இந்து மாமன்றம்.

Related Articles

Back to top button