ஆன்மீகம்

மாத்தளை சிந்தாக்கட்டி குமரப்பெருமான் திருக்கோயில்

சூரனை அடக்கி அருள் தந்த குமரா
வீரவேல் துணையெமக்கு என்றுமே ஐயா
குமரமலை வீற்றிருந்து அருளுகின்ற குமரா
இரங்கிவந்து எமக்குத் துணை இருந்திடுவாய் ஐயா..

மாத்தளை மாநகரில் கோயில் கொண்ட குமரா
மனநிறைவைத் தந்தெம்மை வாழவைப்பாய் ஐயா
வேடுவன் திருமகளை மணந்தவனே குமரா
வெற்றிகளைத் தந்தெம்மை ஆட்சி செய்வாய் ஐயா..

சிந்தாக்கட்டி குமரமலை குடிகொண்ட குமரா
குறைவில்லா பெருவாழ்வை வாழவிடு ஐயா
அழகு மிகு நகர்தனிலே ஆட்சி செய்யும் குமரா
அமைதியெங்கும் நிலைத்திடவே உறுதிசெய்வாய் ஐயா

வல்லமையைத் தந்திடவே வந்திடுவாய் குமரா
அல்லல் அகற்றிடவே துணைபுரிவாய் ஐயா
உண்மையெங்கும் நிறைந்திடவே கருணை செய்யும் குமரா
உள்ளமெல்லாம் உன்பெருமை நிறைந்திடட்டும் ஐயா

ஆறுபடை வீடு கொண்ட முத்தமிழே குமரா
ஆறுதலை எமக்களிக்க ஓடிவா ஐயா
சண்முகனே, சரவணனே சரணம் நீ குமரா
வீறுகொண்டு நாமுயர பொறுப்பாவாய் ஐயா.

ஆக்கம்- த.மனோகரன்.
துணைத் தலைவர்,
அகில இலங்கை இந்து மாமன்றம்.

Related Articles

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com