செய்திகள்

மாத்தளை- சுதுகங்கை ஏழுமுகக் காளியம்மன் திருக்கோயில் 

ஏழுமுகங்களில் அருளொளி பரப்பி
எங்கும் மங்களம் பொங்கிப் பெருகிட
மாத்தளை மாநகர் எல்லையிலே- தாயே
ஏழுமுகங்களுடன் கோயில் கொண்டாய்
கொடுமனங் கொண்டோர் அடங்கிடவும்
நல்லவர் வளம் பெற்று வாழ்ந்திடவும்
நிம்மதி என்றும் நிலைத்திடவும் தாயே
நீயே துணையாய் இருந்திடுவாய்
மனுக்குலம் வளம்பெற உன்னருளே
வழி செய்து அருளிட வேண்டுமம்மா
மகிழ்வும், உயர்வும் நாம் பெறவே தாயே
வழிகாட்டி நம்மை நெறிப்படுத்திடுவாய்
சலசலத்தோடும் சுதுகங்கைக் கரையிலே
கண்கவர் இயற்கைச் சூழலிலே
ஏழுமுகங்களுடன் நீயிருந்து 
எங்களைக் காக்க குடிகொண்டாய்
துன்பங்கள் போக்கி, துயரங்கள் நீக்கி
நிரந்தர நிம்மதி நமைச் சூழ
ஏழுமுகக் காளியம்மாவுன் பார்வை பட்டால்
எல்லாமே நலமாகும் உண்மையன்றோ
நம்பியுன்னடி பணிவோர் நலன் காத்து
வளம் பெருக்கி வாழவைக்க வேண்டுமம்மா
உன் நினைவே எமது பலம்- தாயே
இதை உறுதி செய்து உறுதுணையாயிருப்பாய் அம்மா. 
ஆக்கம்- த.மனோகரன். 
துணைத் தலைவர், 
அகில இலங்கை இந்து மாமன்றம்.

Related Articles

Back to top button