கல்விசெய்திகள்மலையகம்மாத்தளை

மாத்தளை தமிழ் பட்டதாரிகள் ஒன்றியத்தினால் மாணவிக்கு கற்றல் உபகரணம் கையளிப்பு.

மாத்தளை தமிழ் பட்டதாரிகள் ஒன்றியம் – Forum For Tamil Graduates of Matale எப்போதும் எமது சமூகத்திலிருந்து பல்கலைக்கழகம் செல்லும் மாணவர்கள் தமது கல்வியைத் தொடர தேவையான உதவிகளைச் செய்ய கவனத்துடன் செயற்பட்டு வருகிறது.

இந்த அடிப்படையில் மாத்தளை பாக்கியம் தேசியக்கல்லூரியின் மாணவி செல்வி. அனுஜா உயிரியல் தொழில் நுட்ப பட்டப்படிப்பிற்கு தெரிவாகி இருக்கிறார்; குடும்பச் சூழலால் கல்வியை விடும் நிலையில் இருந்த அவர் கற்பதற்கு அவருடைய பாடசாலை ஆசிரியர்களும், அதிபரும் சேர்ந்து செய்த உதவியால் இன்று பல்கலைக்கழகம் செல்லும் வாய்ப்பினைப் பெற்றுள்ளார்.

மாத்தளை தமிழ் பட்டதாரிகள் ஒன்றியத்தின் விஞ்ஞான மற்றும் தொழிநுட்ப பிரிவின் STEM கல்வித்துறையை ஊக்குவிக்கும் பொருட்டு இத்துறையில் பல்கலைக்கழகம் செல்லும் மாத்தளை தமிழ் மாணவர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கான ஊக்குவித்தலை மேற்கொண்டு வருகின்றது. செல்வி. அனுஜா மாத்தளை தமிழ் பாடசாலை ஒன்றில் இருந்து தொழிநுட்பத்துறைக்கு வயம்ப பல்கலைக்கழகத்திற்கு தெரிவான முதலாவது மாணவி.

இந்த வருடம் இந்த திட்டத்தை வெற்றியடைய செய்வதற்கு “ஐயம் இட்டு உண்” அறக்கட்டளையின் ஸ்தாபகரும், முன்னாள் ஈ-கல்வி தொண்டு நிறுவன தலைவருமான திரு. முரளீதரன் அவர்கள் தனது “ஐயம் இட்டு உண்” அமைப்பின் ஊடாக முழு நிதியையும் பெற்றுத்தந்து எமது தொழிநுட்ப பிரிவு ஊடாக மடிக்கணணி ஒன்றினை ஏற்பாடு செய்து இந்த மாணவியின் கற்கைக்காக ஒன்றியத்தினூடாக வழங்கியுள்ளனர்.

இந்த மடிக்கணனி ஒரு நன்கொடையல்ல, மாணவியின் திறனை அடிப்படையாக கொண்டு அவரது கற்கைக்கு கடனாக வழங்கப்படுகிறது இந்தக் கடன் படித்து உயர்ந்த தொழிலிற்கு வந்தபின்னர் இதைப்போல் 10 பிள்ளைகளுக்கு உதவியாக திரும்ப வழங்கப்படும் என்ற மாணவியின் உறுதி மொழியுடனேயே இம்மடிக்கணணி வழங்கப்படுகின்றது.

இந்த நிகழ்வின் பிரதம அதிதியாக ஒன்றியத்தின் தலைமை ஆலோசகர் மற்றும் இயக்குனர் சபை உறுப்பினர் Dr. சுமனேந்திரன் அவர்களும், பாடசாலை அதிபர் அவர்களும், ஒன்றியம் சார்பாக பாடசாலை அபிரவிருத்திச் சங்க உறுப்பினர், ஒன்றியத்தின் ஆலோசகர் திரு. ஜெயபிரகாஷ் அவர்கள் மற்றும் ஒன்றியத்தின் இயக்குனர் சபை உறுப்பினர் மற்றும் தொழிநுட்பத்துறை பொறுப்பாளர் திரு. ரவிசங்கர் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வை நனவாக்கிய “ஐயம் இட்டு உண்” அமைப்பின் ஸ்தாபகர் திரு. முரளீதரன் அவர்களுக்கு ஒன்றியத்தின் சார்பான நன்றிகள்.

நன்றி – மாத்தளை தமிழ் பட்டதாரிகள் ஒன்றியம்.

Related Articles

Back to top button