சமூகம்செய்திகள்மலையகம்மாத்தளை

மாத்தளை, பிட்டகந்தயைச் சேர்ந்த இளைஞர் யுவதிகள் ஒன்றிணைந்து ‘விழுதுகள் அமைப்பு’ உருவாக்கம்!

மாத்தளை, பிட்டகந்தயைச் சேர்ந்த இளைஞர் யுவதிகள் ஒன்றிணைந்து விழுதுகள் அமைப்பு எனும் இளைஞர் கழகத்தினை உருவாக்கியுள்ளனர்.

இவ்வாறான அமைப்பினை உருவாக்கக் காரணம் இக் கிராமம் பல அபிவிருத்திகளில் பின்னடைவிலேயே இருந்துள்ளது. ஆகவே இளைஞர் யுவதிகள் ஒன்றிணைந்து இவ்வாறான அமைப்பை உருவாக்கி தமது கிராமத்தை அபிவிருத்திப் பாதையில் இட்டுச்செல்ல முடியுமெனவும், இவ்வாறான செயற்பாடுகள் மூலம் ஏனைய சமூகங்களிலும் மாற்றங்கள் உருவாகலாம் எனவும் எண்ணியுள்ளனர்.

“எமது சமூகத்தின் படிமுறையான அபிவிருத்திக்காக ஒன்றிணைந்து செயற்படல்” எனும் நோக்கத்தினைக் கொண்டு செயற்படுகின்றனர்.

இவ் அமைப்பின் முதல் (தடமாக) வேலைத்திட்டமாக சுவரோவியத்தினை வரைந்திட தீர்மானித்து அதனை வெற்றிகரமாக முடித்து 21.03.2021 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை அதன் திறப்பு விழாவினை சிறப்புற நிகழ்த்தியுள்ளனர்.

அந்தவகையில் சுவரோவியத் திறப்பு விழாவின் சிறப்பு அதிதியாக மதிப்பிற்குரிய தோட்ட முகாமையாளர் திரு.பிரபோத கருணாரத்ன ஐயா அவர்கள் கலந்துகொண்டுள்ளார்.

இவ்வேளையில் இச் சுவரேவியத்தினை வரைந்த இக் கிராமத்தைச் சேர்ந்த ஆசிரியர் திரு. ஜெ. இளங்கேசன் அவர்களை கௌரவிக்கும் முகமாக கொரவிப்புச் சின்னம் வழங்கி வைக்கப்பட்டது.

மற்றும் விழுதுகள் அமைப்பு என பெயர் சூட காரணமாகவும், இவ் அமைப்பிற்கு பல ஆலோசனைகளும், உதவிகளும் செய்த செய்துகொண்டிருக்கும் பிட்டகந்த பாடசாலையைச் சேர்ந்த ஆசிரியர் திரு.வீ.மனோஜ் அவர்களும் இவ்வேளையில் கௌரவிக்கப்பட்டார்.

மேலும் தைப்பெங்கல் விழாவிற்காக நடாத்தப்பட்ட கவிதை,கட்டுரை, மற்றும் சித்திரப் போட்டிகளின் வெற்றியார்களுக்கான பரிசளிப்பும் இடம்பெற்றது.

விழாவில் சிறப்பு அதிதி அவர்களின் உரை, கௌரவிப்பாளரின் உரை, தோட்டத் தலைவரின் உரை, ஆலயத் தலைவரின் உரை மற்றும் விழுதுகள் அமைப்பின் தலைவரின் போன்றன இடம்பெற்றது.

விழுதுகள் அமைப்பின் தலைவரினால் இவ் வேலைத்திட்டத்திற்கும் இவ் விழாவிற்கும் உதவியவர்களுக்கும் இவர்களுடன் ஒன்றிணைந்து பயணிக்கும் நல்லுள்ளங்கள், பொதுமக்கள் அனைவருக்கும் நன்றிகளும் பாராட்டுக்களும் தெரிவிக்கப்பட்டது.

மேலும் இவ் அமைப்பு மூலம் இவ்வருடம் இக் கிராமத்தில் இருந்து பாடசாலைக்கு செல்லும் 65 குடும்பங்களைச் சேர்ந்த 110 மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் மாத்தளை முத்துமாரியம்மன் ஆலயம், மற்றும் நலன்விரும்பிகளிடமிருந்து பெற்றுக்கொடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஏனைய கிராமங்களில் இவ்வாறான அமைப்புக்களின் உருவாக்கம் எதிர்கால சமூதாயத்தை சிறந்தவொரு சமூதாயமாக மாற்றும் என்பதில் எந்தவித ஐயமுமில்லை.

தகவல் #நோகேஷ்

Related Articles

Back to top button