மலையகம்மாத்தளைவிளையாட்டு

மாத்தளை, பிட்டகந்த தோட்டத்தில் புதிதாக திறக்கப்பட மைதானம் ..

மாத்தளை, பிட்டகந்ததோட்டத்தில் பல வருடங்களாக விளையாட்டு மைதானம் ஒன்று இல்லாத போதிலும் அதற்கான முயற்சிகளை மேற்கொண்டு கிராமத்திற்கென தற்போது ஒரு மைதானத்தினைஅமித்துக்கொண்டமைக்கு மகிழ்ச்சியடைகின்றனர்.

அந்தவகையில் இந்த மைதானம்அமைக்க உதவிய தோட்ட நிர்வாகத்தினர், மா/பிட்டகந்த த.வி பாடசாலை அதிபர்,ஆசிரியர்,மாணவர்கள், பிட்டகந்த, பெரிய செல்வகந்த, சின்ன செல்வகந்த, கந்தேநுவர, தம்பலகல கிராம மக்கள், முக்கியமாக திரு.மோகன் ஐயா, திரு.ரந்தீப் ஐயா, திரு.லோகநாதன் மற்றும் இளைஞர்கள் ஒத்துழைப்பு கிடைக்கப் பெற்றதாலே இந்த மைதானம் அமையப் பெற்றுள்ளது என்பதை இங்கு சுட்டிக்காட்ட வேண்டும்.

ஆகவே அவர்கள் அனைவருக்கும் கிராம விளையாட்டுக் கழக தலைவர், செயலாளர், பொருளாலர்,கிராம இளைஞர்கள் மற்றும் பொது மக்கள் சார்பாக மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிண்டனர்.

அந்தவகையில் மைதானத் திறப்பு விழா 14.04.2021 ஆம் திகதி சித்திரைப் புத்தாண்டு தினத்தன்று கிராம சேவகர், மோகன், லோகநாதன் மற்றும் இளைஞர்கள், பொது மக்கள் சூழதிறந்து வைக்கப்பட்டது. இதன் போது மைதானம் அமைய ஒத்துழைப்பு வழங்கியவர்கள் கழகத்தினால் கௌரவிக்கப்பட்டார்கள். அதனைத் தொடர்ந்து இவ் வருடத்திற்கான PPL (பிட்டகந்த பிரிமியர் லீக்) விளையாட்டுப் போட்டியும் சிறந்த முறையில் இனிதே ஆரம்பமானது.

தகவல். க்ரீன் ஸ்டார் விளையாட்டுக் கழக செயலாளர் #நோகேஷ்

Related Articles

Back to top button
image download