செய்திகள்மலையகம்மாத்தளை

மாத்தளை மாவட்ட விவசாயிகளுக்கு சந்தர்ப்பம்

தம்புள்ளை விசேட பொருளாதார மத்திய நிலையத்தின் செயற்பாடுகளை தொடர்ந்தும் மாத்தளை மாவட்ட விவசாயிகளுக்கு மாத்திரம் மட்டுப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நேற்று நடைபெற்ற மாவட்ட கொரோனா ஒழிப்புக்குழுக் கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இன்று முதல் எதிர்வரும் மூன்று நாட்களுக்கு மாத்தளை மாவட்ட விவசாயிகளிடமிருந்து மாத்திரம் மரக்கறிகளை கொள்வனவு செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தம்புள்ளை பிரதேச செயலாளரும் தம்புள்ளை விசேட பொருளாதார மத்திய நிலையத்தின் நிர்வாக பொறுப்பு செயலாளரான பியல் ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

தம்புள்ளை விசேட பொருளாதார மத்திய நிலையத்துக்கு மரக்கறிகளை கொண்டு வருவதை தவிர்க்குமாறு ஏனைய மாவட்ட விவசாயிகள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். கடந்த 5ம் திகதி மீள திறக்கப்பட்ட தம்புள்ளை விசேட பொருளாதார மத்திய நிலையத்தில் ஏற்படும் நெரிசலை குறைக்கும் நோக்கில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

தம்புள்ளை விசேட பொருளாதார மத்திய நியைலயத்துக்கு வருகை தரும் வர்த்தகர்கள் மற்றும் நுகர்வோரின் எண்ணிக்கையையும் மட்டுப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தம்புள்ளை விசேட பொருளாதார மத்திய நிலையத்தின் நிர்வாக பொறுப்பு செயலாளர் பியல் ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

Related Articles

Back to top button
image download