...
நிகழ்வுகள்

மாத்தளை ரொற்றி கழகத்தினால் புதிய உறுப்பினர்களை இணைத்துக் கொள்ளும் நிகழ்வு.

மாத்தளை ரொற்றி கழகத்தினால் புதிய உறுப்பினர்களை இணைத்துக் கொள்கின்ற நிகழ்வு நாளை இடம்பெற உள்ளது. இந்நிகழ்வு நாளை மாலை 06.30 மணியளவில் நடைபெறவுள்ளது.

குறித்த நிகழ்வில் முன்னாள் இலங்கை கிரிக்கட் அணியின் தலைவர் அர்ஜுன ரணதுங்க மற்றும் ரொற்றி கழக முன்னாள் ஆளுனர் கௌரிராஜன் அவர்களும் கலந்து சிறப்பிக்கவுள்ளார்கள்.

குறித்த தினத்தில் புதிய அங்கத்தவர்களை இணைத்துக்கொள்வதற்கான அழைப்புகள் விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் குறித்த தினத்தில் தோட்டப்புறங்களில் வறுமையில் வாழும் பிள்ளைகளுக்கு புத்தகங்கள் வழங்கி வைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அத்துடன் மரக்கன்றுகள் விற்பனை செய்யும் நிகழ்வும் இடம்பெற உள்ளது.

Related Articles

Back to top button


Thubinail image
Screen