மாமாவால் 14 வயது சிறுமிக்கு நடந்த கொடூரம்
பாட்டியின் பாதுகாப்பில் இருந்து வந்த 14 வயதுடைய சிறுமி ஒருவர் மாமாவால் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தந்தை உயிரிழந்ததையடுத்து தாய் வௌிநாடு சென்றதனால் தனது பாட்டியுடன் குறித்த சிறுமி வசித்து வந்துள்ளார்.
இந்த நிலையில், கடந்த 2011ம் ஆண்டு முதல் சந்தேகநபர் தன்னை பாலியல் துஷ்பிரயோகம் செய்து வந்ததாக பொலிஸ் முறைப்பாட்டில் குறித்த சிறுமி கூறியுள்ளார்.
37 வயதுடைய சந்தேகநபர் கொழும்பில் தொழில் செய்து வருவதாகவும், இரண்டு நாட்களுக்கு முன்னர் சந்தேகநபர் வீட்டுக்கு வரவுள்ளதை அறிந்த சிறுமி தங்கையுடன் வனப் பகுதிக்கு சென்று ஒழிந்து கொண்டுள்ளார்.
இதன்போது, பொலிஸ் அவசர இலக்கத்துக்கு தகவல் வழங்கியதையடுத்து இரண்டு பேரும் பொலிஸ் நிலையத்துக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர்.
மேலும், இரண்டு பேரும் நீதிமன்ற உத்தரவுப்படி சிறுவர் பராமரிப்பு நிலையத்தில் ஒப்படைக்கப்பட உள்ளதுடன், சந்தேகநபரை கைது செய்வதற்காக பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.