கல்விமலையகம்மாத்தளை

‘மாற்றத்தை நோக்கி’ அமைப்பினால் இறத்தோட்டையில் பாடசாலை மாணவர்களுக்கு உதவிக்கரம்.

‘மாற்றத்தை நோக்கி’ அமைப்பினால் வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் 20 பாடசாலை மாணவ மாணவியர்களுக்கு இறத்தோட்டை தமிழ் மகா வித்தியாலயத்தின் முன்நாள் உபஅதிபர் திருமதி.சுகுமாரன் தலைமையில் நேற்றைய தினம் (6) பாதணிகள், பாடசாலை கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வானது மாத்தளை இறத்தோட்டை பிரதேச சபை மண்டபத்தில் இடம்பெற்றிருந்தது.

இந்நிகழ்வில் பாடசாலை ஆசிரியர்கள், பெற்றோர்கள் ‘மாற்றத்தை நோக்கி’ அமைப்பின் பொருளாளர் உதயகுமார் மற்றும் ஏனைய உறுப்பினர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

Related Articles

Back to top button
image download