உலகம்

மாலி தேசத்தில் இராணுவ நிலைகளுக்கு தாக்குதல்.

மாலியின் வடபகுதியில் இராணுவ நிலைகளை இலக்குவைத்து நடத்தப்பட்ட தாக்குதல்களில் 54 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

கொல்லப்பட்டவர்களில் ஒரு பொதுமகன் உட்பட 53 சிப்பாய்கள் அடங்குவதாக மாலி அரசாங்கம் தெரிவித்துள்ளது.

ஜிஹாதிஸ்ட்டுக்களால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறாயினும் தற்போது நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக மாலி அரசாங்கத்தின் ஊடகப்பேச்சாளர் யாயா சங்கரே தனது ட்விட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

Related Articles

Back to top button