செய்திகள்

மாவின் விலை அதிகரிப்புக்கு அனுமதி வழங்கவில்லை – நுகர்வோர் விவகார அதிகார சபை.

கோதுமை மாவின் விலையை அதிகரிப்பதற்கு நிறுவனங்களுக்கோ அல்லது வர்த்தகர்களுக்கோ எவ்வித அனுமதியும் வழங்கவில்லை என நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.

தங்களின் எழுத்துமூல அனுமதி இன்றி கோதுமை மாவின் விலையை அதிகரிப்பது சட்ட விரோதமானது என அறிக்கை ஒன்றினூடாக அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.

அதற்கமைய, அதிக விலையில் கோதுமை மாவை விற்பனை செய்யும் ,வர்த்தக நிலையங்கள் குறித்து சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அவ்வாறான செயல்களில் ஈடுபடுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.

கோதுமை மாவின் விலை 87 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

எவ்வித முன் அறிவித்தல்களும் இன்றி ப்றிமா மற்றும் செரண்டிப் நிறுவனங்கள் நேற்று முன்தினம் இரவு தொடக்கம் கோதுமை மாவிற்கான விலையை எட்டு ரூபாவால் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
image download