தொழில்நுட்பம்
மிகவும் எதிர்பார்த்த அம்சம் கூகுள் மேப்ஸ் செயலியில் அறிமுகம்.!

கூகுள் நிறுவனம் தொடர்ந்து பல்வேறு புதிய முயற்சிகளை செயல்படுத்தி வருகிறது, அதன்படி கூகுள் மேப்ஸ் செயலியில் மிகவும் எதிர்பார்த்த அம்சத்தை கொண்டுவந்துள்ளது , இந்த அம்சம் பல்வேறு மக்களுக்கு பயனுள்ள வகையில் இருக்கும்.

தற்சமயம் கூகுள் மேப்ஸ் செயலியில் இருந்தபடி குறுந்தகவல் அனப்பிக் கொள்ளலாம், இருந்தபோதிலும் குறுந்தகவல் அம்சம் கொண்டு நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் குறுந்தகவல் அனுப்பிக் கொள்ள முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூகுள் மேப்ஸ் கூகுள் மேப்ஸ் செயலியில் வெளிவந்துள்ள இந்த புதிய அம்சம் வியாபர மையங்களுக்கு மட்டுமே குறுந்தகவல் அனுப்பிக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதுகுறித்து வெளியாகி இருக்கும் ஸ்கிரீன்ஷாட்களில் கூகுள் மேப்ஸ் பயனர்கள் நிறுவனங்களை தொடர்பு கொள்ள முடியும்.