சமூகம்
மிக சிறப்பாக இடம்பெற்ற பம்பலப்பிட்டி மாணிக்க விநாயகர் ஆலயத்தின் தேர் திருவிழா

கொழும்பு – பம்பலப்பிட்டி சம்மாங்கோடு ஸ்ரீ மாணிக்கவிநாயகர் ஆலயத்தின் வருடாந்த திருவிழா இன்று நடைப் பெறுகின்றது.
இதன்போது ஆலயத்தில் விசேட பூஜைகளும் நடைபெற்றன.
தொடர்ந்தும் வீதியுலா வரும் பிள்ளையார் லோரன்ஸ் வீதி வழியாக, காலி வீதி வெள்ளவத்தை இராம்கிருஷ்ண வீதி வரை சென்று மீண்டும் காலி வீதி வழியாக திரும்பி ஆலயத்தை வந்தடையும்.
மேலும், இதில் பெருந்திரளான பக்த அடியார்கள் கலந்து கொண்டு தங்களின் வேண்டுதல்களை நிறைவேற்றி வருகின்றனர்.