செய்திகள்
மின்சார சபையின் முன்னாள் தலைவருக்கு கோப் குழு அழைப்பு!

இலங்கை மின்சார சபையின் முன்னாள் தலைவர் எம்.எம்.சி.பெர்டினாண்டோ மீண்டும் கோப் குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ளார்.
அறிக்கை ஒன்றை வெளியிட்டு நாடாளுமன்ற தொடர்பாடல் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது. அதற்கமைய, எதிர்வரும் 23ஆம் திகதி அவரை குறித்த குழுவில் முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.