...
செய்திகள்

மின்சார வேலியில் சிக்கி உயிரிழந்த யானையை புதைத்தவர் கைது!!!1

புத்தளம், கலடிய 6ஆம் தூண் பகுதியிலுள்ள காணியில் பொருத்தப்பட்டுள்ள மின்சார வேலியில் சிக்கி யானை யொன்று உயிரிழந்து புதைக்கப்பட்ட நிலையில் இன்று கண்டுபிடிக்கப் பட்டுள்ளதாக புத்தளம் வன ஜீவராசிகள் உதவிப் பணிப்பாளர் எரந்த கமகே தெரிவித்தார்.

பல நாட்களுக்கு முன்னர் பண்ணை ஒன்றில் வேறு ஒருவரின் வீட்டிலிருந்து சட்டவிரோதமாக மின்சாரம் பெற்று மின்சார வேலியுடன் இணைக்கப்பட்டிருந்த நிலையில் யானை ஒன்று சிக்குண்டு சம்பவ இடத்திலேயே உயிரி ழந்துள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் புத்தளம் வனஜீவராசிகள் வலய அலுவலகத்துக்குத் தகவல் கிடைத்ததும் காணியைப் பரிசோதிக்கத் தேடுதல் உத்தரவு பெற்று, காணியை பரிசோதித்த போது யானை புதைக்கப்பட்ட நிலையில் காணப்பட்டது.

குறித்த சம்பவம் தொடர்பில் காணியின் உரிமையாளர் வனவிலங்கு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மின்சாரம் பாய்ந்து யானை உயிரிழந்துள்ளதாக வனவிலங்கு அதிகாரி கள் தெரிவித்துள்ளனர்.

யானையின் தந்தங்கள் வனஜீவராசிகள் திணைக்களத் தினால் கைப்பற்றப்பட்டதுடன், கைது செய்யப்பட்ட சந்தேக நபரை புத்தளம் நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப டுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

புத்தளம் வன ஜீவராசிகள் வலய அலுவலகத்தின் தளப் பாதுகாவலர் சஞ் சீவ வீரசேகர, கருவலகஸ்வெவ வனஜீவராசிகள் அலுவலகத்தின் திலின திஸாநாயக்க மற்றும் வனவிலங்கு உத்தியோகஸ்தர்கள் பலர் விசா ரணையில் ஈடுபட்டனர்.

Related Articles

Back to top button


Thubinail image
Screen