செய்திகள்
மின்னேரியா சம்பவம் : 12 பேர் அதிரடி கைது …!
மின்னேரிய தேசிய பூங்காவில் வைத்து வனஜீவராசிகள் அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்திய 12 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட இந்த 12 பேரினுள் ஹிங்குராங்கொட பிரதேச சபை உறுப்பினர் ஒருவரும் அடங்குவதாக தெரிவித்த பொலிஸார், சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டவர்களிடம் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.