செய்திகள்

மின் விநியோக தடையால் 475,000 பேர் பாதிப்பு.!

நாட்டில் தற்போது நிலவும் மழையுடன்கூடிய சீரற்ற காலநிலையில் நாடு முழுவதிலுமுள்ள சுமார் 475,000 பேருக்கு மின்சார விநியோகம் தடைப்பட்டுள்ளது என மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

குறிப்பாக புத்தளம், குருநாகல், கேகாலை, கம்பஹா மற்றும் காலி மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் அதிகளவு பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் நிலவி வரும் சீரற்ற வானிலை மற்றும் காற்று காரணமாக பல பாகங்களில் மரம், மின்கம்பங்கள் சரிந்து வீழ்ந்துள்ளதனால் இவ்வாறு மின்தடை ஏற்பட்டுள்ளது. எனினும் தற்போது அந்தந்த பகுதிகளை சேர்ந்த மின்சார சபை ஊழியர்களால் திருத்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

Related Articles

Back to top button