...
செய்திகள்

மிளகு, கறுவா, கராம்பு, கோப்பி பாக்கு உற்பத்தியாளர்களுக்கு நல்ல வருமானம்.

உள்நாட்டு சந்தையில் மிளகு, கறுவா, கராம்பு உட்பட பல ஏற்றுமதி பொருட்களின் விலை அதிகரித்துள்ளது..

இதனால் மிளகு ,கறுவா, கராம்பு, கோப்பி பாக்கு உற்பத்தியாளர்களுக்கு நல்ல வருமானம் கிடைத்துவருகிறது.

இதன்படி மிளகு ஒரு கிலோ கிராம் ரூபாய் 800 ஆகவும், க,கறுவா ஒரு கிலோ கிராம் ரூபாய் 3,400 ஆகவும், கராம்பு ஒரு கிலோகிராம் ரூபா 1,500 ஆகவும், கோப்பி ஒரு கிலோகிராம் ரூ 1200 ஆகவும் விலை உயர்ந்துள்ளதாக ஏற்றுமதி விவசாய திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் ஏ. பி ஹீன் கெந்த தெரிவித்தார்.

மேலும், கடந்த ஆண்டு (2020) ஆகஸ்ட் மாதத்தில் ஒரு கிலோகிராம் மிளகு ரூபாய் 450 க்கும், ஒரு கிலோகிராம் கோப்பி ரூபாய். 800 க்கும் விற்பனை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை ஒரு கிலோகிராம் பாக்கின் விலை ரூ .900 ஆக உயர்ந்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

தற்போது சந்தையில் ஒரு பாக்கின் விலை ரூபாய். 20 முதல் 25 வரை உயர்ந்துள்ளது.

பாக்கு அறுவடை குறைந்துள்ளதால் இந்த நிலை. இருப்பினும், ஆகஸ்ட் மாதம் முதல் ஒக்டோபர் மாதம் வரையிலான காலப்பகுதியில் பாக்கின் விலை உயர்வடையும். மற்றும் பெப்ரவரி மாதத்தில் பாக்கின் அறுவடை அதிகரிப்பதனால், பாக்கின் விலை குறைவடையும் என்றும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை, தற்போது சந்தையில் வெற்றிலை ஒன்றின் விலை ரூபாய். 4 – 5 ஆக உயர்ந்துள்ளது என்றும் விவசாய திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் ஏ. பி ஹீன் கெந்த மேலும் தெரிவித்தார்.

Related Articles

Back to top button


Thubinail image
Screen