செய்திகள்

மீண்டும் இந்தியாவுக்கான படகு சேவையை ஆரம்பிக்க பேச்சு!

இலங்கையில் இருந்து இந்தியாவின் தமிழ்நாட்டிற்கு மீண்டும் படகு சேவையை ஆரம்பிப்பதற்கு கலந்துரையாடப்பட்டதாக பிரதமர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

இலங்கைக்கு விஜயம் செய்த தமிழ்நாடு தி.மு.க.வின் துணைத்தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழியுடன் பிரதமர் கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

இதன்போதே  தமிழ் நாட்டுக்கான படகுச் சேவையை மீண்டும் ஆரம்பிப்பது குறித்து ஆராயப்பட்டுள்ளதுடன் இது குறித்து ஆர்வத்துடன் இருப்பதாக பிரதமர் கனிமொழியிடம் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 2011ஆம் ஆண்டு கொழும்பு மற்றும் தமிழ் நாட்டின் தூத்துக்குடிக்கான படகு சேவை தொடங்கியது. எனினும் போக்குரவரத்து அதிகளவில் இடம்பெறாமையால் படகுச் சேவைகள் அனைத்தும் நிறுத்தப்பட்டிருந்தன.

இதேவேளை, கனிமொழியுடனான சந்திப்பில் இலங்கை இந்திய மீனவர் பிரச்சினை குறித்து கலந்துரையாடப்பட்டதோடு, மனிதாபிமான அடிப்படையில் தீர்வு காண இணக்கம் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button