செய்திகள்

“மீண்டும் கொரோனா கொத்தணி உருவாகலாம்” ; சுகாதார தரப்பினர் எச்சரிக்கை.!

நாட்டுக்கு பாரிய அச்சத்தை ஏற்படுத்தியுள்ள கொவிட் பரவலை கட்டுப்படுத்துவதற்காக அமுல்படுத்தப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை தளர்த்துவது தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என சுகாதார பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.

நாளாந்தம் பதிவாகும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த மட்டத்தில் பதிவாகும் நிலையில், உரிய திட்டமிடலின்றி நாட்டை திறந்தால் மீண்டும் கொரோனா கொத்தணி உருவாகுவதற்கு அதிக வாய்ப்புக்கள் காணப்படுவதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நாட்டில் இதுவரை பதிவாகியுள்ள மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 2 இலட்சத்து 69 ஆயிரத்து 946 ஆகும். இதில் 26 ஆயிரத்து 971 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 2 இலட்சத்து 39 ஆயிரத்து 584 ஆகும். நாட்டில் பதிவாகியுள்ள கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 391 ஆகும். நேற்றைய தினம் நாட்டில் மேற்கொள்ளப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனைகளின் எண்ணிக்கை 10 ஆயிரத்து 551 ஆகும்.

Related Articles

Back to top button