உலகம்

ஓகஸ்ட் மாத இறுதி வரை முடக்க நிலையில் அவுஸ்திரேலியா

அவுஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் தற்போது உள்ள முடக்கநிலை மேலும் ஒரு மாதத்துக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், ஓகஸ்ட் மாத இறுதிவரை முடக்கநிலை நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் சமூக அளவில் புதிதாக 180 பேரிடம் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

பாதுகாப்பு இடைவெளியைக் கடைப்பிடிப்பது, மூடப்பட்ட இடங்களில் முகக்கவசம் அணிவது போன்ற விதிமுறைகள் வேலையிடங்களில் பின்பற்றப்படாதது கவலை அளிப்பதாக மாநில முதல்வர் கிளாடிஸ் பெரஜிக்லியன் கூறினார்.

விதிமுறைகளைக் கடைப்பிடித்து தடுப்பூசி போட்டுக்கொள்வது மட்டுமே தற்போதைய நிலைக்கான தீர்வு என்றார் அவர்.அண்டை மாநிலமான விக்டோரியாவில் நேற்று முடக்கநிலை முடிவுக்கு வந்தது. புதிதாக அங்கு 9 பேரிடம் தொற்று அடையாளம் காணப்பட்டது.

Related Articles

Back to top button